வலங்கைமானில், இன்று மக்கள் கிராம சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்

வலங்கைமானில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
வலங்கைமானில், இன்று மக்கள் கிராம சபை கூட்டம் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்
Published on

திருவாரூர்,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். அதன்படி இன்று(திங்கட்கிழமை) திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள அவளிவ நல்லூர் கிராமத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

குறைகள் கேட்கிறார்

இதற்காக தஞ்சையில் இருந்து இன்று காலை காரில் புறப்பட்டு வலங்கைமான் அவளிவநல்லூருக்கு காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். அங்கு மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் செல்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com