வேளச்சேரியில் டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

வேளச்சேரியில், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
வேளச்சேரியில் டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
Published on

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி விஜயநகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகர்சாமி, தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் அவர் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார். அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் இருந்த துணிகள் அனைத்தும் தரையில் சிதறி கிடந்தன. பின்னர் பீரோவை சோதனை செய்தபோது, அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரிந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்துகொண்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றி வேளச்சேரி போலீசில், டாக்டர் அழகர்சாமி புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களை வரவழைத்து, வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com