வேலூர் மாவட்டத்தில், ஒரேநாளில் மாநகராட்சி அலுவலர், அரசு ஊழியர்கள் உள்பட 168 பேருக்கு கொரோனா வேலூர் தாலுகா அலுவலகம், 2 தனியார் வங்கிகள் மூடப்பட்டன

வேலூர் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலக உதவியாளர்கள் உள்பட 168 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வேலூர் தாலுகா அலுவலகம், 2 தனியார் வங்கிகள் மூடப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில், ஒரேநாளில் மாநகராட்சி அலுவலர், அரசு ஊழியர்கள் உள்பட 168 பேருக்கு கொரோனா வேலூர் தாலுகா அலுவலகம், 2 தனியார் வங்கிகள் மூடப்பட்டன
Published on

வேலூர்,

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல வருவாய் ஆய்வாளருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை காணப்பட்டன. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகிய நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் தாலுகா அலுவலக உதவியாளர்கள் மற்றும் கொரோனா தொடர்பான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கும் தாசில்தாரின் டிரைவர் உள்பட சிலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு சளிமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில், 2 உதவியாளர்கள், டிரைவர் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதையடுத்து தாலுகா அலுவலகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். பின்னர் அனைத்து ஊழியர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் உள்பட 5 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வேலூர் லாங்கு பஜாரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் மற்றும் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் உள்ள தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அந்த வங்கி ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் வங்கிகளில் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டன. வேலூர் ஆயுதப்படை போலீசார் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் முத்துமண்டபத்தில் ஒருவயது ஆண்குழந்தை, அரியூரில் 4 வயது ஆண்குழந்தை, பேரிபக்காரியம்மன் தெருவில் 5 வயது பெண்குழந்தை, சேண்பாக்கத்தில் 10 வயது ஆண்குழந்தை, 75 வயது முதியவர் உள்பட 7 பேர், பில்டர்பெட் சாலையில் 7 பேர், பலவன்சாத்து குப்பத்தில் 18 பேர், மாநகராட்சி பகுதியில் 114 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 168 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,006 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். 168 பேர் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,176 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com