வெங்குளத்தில், குடிநீருக்காக கிணறு தோண்டிய கிராம மக்கள்

ராமநாதபுரம்அருகே வெங்குளம் கிராமத்தில் குடிநீருக்காக கிராம மக்களே நிதிதிரட்டி கிணறுதோண்டி உள்ளனர்.
வெங்குளத்தில், குடிநீருக்காக கிணறு தோண்டிய கிராம மக்கள்
Published on

ராமநாதபுரம்,

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளா ஊராட்சி. இங்குள்ள வெங்குளம் கிராமத்தில் கடந்த காலங்களில் யூனியன் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதன்பின்னர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் போடப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. கண்மாயில் உள்ள கிணற்றில் தண்ணீர் வறண்டு ஊற்று ஊறியதும் ஒரு மணி நேரம் காத்திருந்து மக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிராம மக்கள் குடிப்பதற்கும், அன்றாட உபயோகத்திற்கும் தேவைப்படும் தண்ணீருக்காக அவதிப்படும் நிலையை கண்ட இளைஞர்கள்,கிராமமக்கள் தாங்களே கிணறு தோண்ட முடிவு செய்தனர். இதற்காக இளைஞர்கள், கிராம மக்கள் நிதி அளித்து கண்மாய்க்கு 2 கிணறுகள் தோண்டி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் கிணறுகளை தோண்டியதில் ஒரு கிணற்றில் உவர்ப்பு தன்மையுடனும், மற்றொன்றில் ஓரளவு நல்ல தண்ணீரும் கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்த கோடை வறட்சியை இந்த தண்ணீரை கொண்டு சமாளித்து கொள்ளலாம் என்று கிராமத்தினர் தெரிவித்தனர். தண்ணீருக்காக அரசை நம்பி எதிர்பார்த்து காத்திருக்காமல் வெங்குளம் கிராம மக்கள் தாங்களே நிதி திரட்டிகிணறு தோண்டி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது பாராட்டுக்குரியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com