விருதுநகர் மாவட்டத்தில் முதல் நாளில் 180 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது; கலெக்டர் கண்ணன் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் முதல் நாளான நேற்று 180 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணியை கலெக்டர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன்
Published on

தடுப்பூசி

கொரோனாபரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

மராட்டிய மாநிலம் தானே அரசு ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

முதல்கட்டம்

இதில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு 9,720 டோஸ் ஊசி மருந்து வரப்பெற்றுள்ளது. முதல் கட்டமாக 10,000 மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

தினசரி 100 பேருக்கு ஒரு மையத்தில் தடுப்பூசி போடப்படும். ஒவ்வொரு நபருக்கும் 2 தவணைகளாக 28 நாட்கள் இடைவெளியில் அட்டவணையின்படி தடுப்பூசி போடப்படும்.

நேற்று விருதுநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 20 பேருக்கும், அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் 40 பேருக்கும், திருச்சுழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 42 பேருக்கும் ஆக மொத்தம் 102 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 19 பேருக்கும், குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 பேருக்கும், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 பேருக்கும், ராஜபாளையம் மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியில் 49 பேருக்கும் ஆக மொத்தம் 78 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆய்வு

7 மையங்களில் சேர்த்து 180 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.கலெக்டர் கண்ணன் நேற்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது இம்மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள விதிகளின்படி தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி, மருத்துவ அதிகாரிகள் டாக்டர்கள் அன்புவேல், அரவிந்த் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com