விருதுநகரில் பொது நூலகத்துறை சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்குவது எப்போது?

விருதுநகரில் பொது நூலகத்துறை சார்பில் போட்டி தேர்வு மையம் தொடங்கப்படும் என ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விருதுநகரில் பொது நூலகத்துறை சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்குவது எப்போது?
Published on

விருதுநகர்,

மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள உரிய பயிற்சிகளை பெறுவதற்கு அரசுத்துறை சார்பில் பயிற்சி மையம் தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தனியார் நிறுவனங்களும் அரசு சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க தேவையான நிதியுதவி செய்யவும் முன்வந்தன.

இதனை தொடர்ந்து பொதுநூலகத்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்குவது என்றும், இதற்கான கட்டிடம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது நூலகத்துறை சார்பில் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பொதுநூலகத்துறை மாவட்ட அலுவலகத்துக்கும் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஓராண்டுக்கு முன்னர் கட்டிடப்பணி முடிவடைந்து மாவட்ட பொது நூலகத்துறை அலுவலகம் அங்கு செயல்பட தொடங்கி உள்ளது. ஆனாலும் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்குவதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.

இதனால் படித்த இளைஞர்கள் தனியார் பயிற்சி மையங்களை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஏழை, எளிய மாணவர் களுக்கு இதற்கான வாய்ப்பு வசதி இல்லாததால் அவர்கள் உரிய பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் நிலை தொடர்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுநூலகத்துறை கட்டிடத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதியில் உள்ள பயிற்சியாளர்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி தர தயாராக உள்ள நிலையில் அதனை பயன்படுத்தி பொது நூலகத்துறையும் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com