யோகாசனத்தில் மாணவி சாதனை

ராஜபாளையத்தில் யோகாசனத்தில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.
யோகாசனத்தில் மாணவி சாதனை
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹரிலட்சுமி காமராஜர் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே யோகாவில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

பள்ளியில் யோகா நிகழ்ச்சியில் மாணவி ஹரிலட்சுமி ஒரே காலில் நின்று நடராஜர் ஆசனத்தை தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் செய்துள்ளார். திறமையை பார்த்த பள்ளி யோகா மாஸ்டர் அருண்குமார் மாணவி யோகா செய்யும் வீடியோவை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அந்த யோகாவை அங்கீகரித்த நிறுவனர் சாதனையாளர் சான்றிதழ் வழங்க முன்வந்தது. தமிழ்நாடு யோகா அமைப்பின் பொது நிர்வாக மேலாளர் வினோத் யோகா நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் முன்னிலையில் மாணவி ஹரிலட்சுமி ஒன்றை காலில் செய்யும் நடராஜர் ஆசனத்தை சுமார் 10 நிமிடங்கள் செய்து சாதனை புரிந்தார்.

மாணவிக்கு நிர்வாக அதிகாரி வினோத் பதக்கத்தையும், சான்றிதழயையும் வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் ரூ.1000 ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளித்தாளாளர் பிரதாப், உதவி தாளாளர் சவுந்திரபாண்டியன், செயலர் பொன்ராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் சின்னச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவியை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com