அரக்கோணத்தில் மின்சார ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பை

திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரெயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்ற போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.
அரக்கோணத்தில் மின்சார ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பை
Published on

அரக்கோணம்,

ரெயில் பயணிகள் மத்தியில் இந்த பையை பார்த்ததும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்இன்ஸ்பெக்டர்கள் கிரி, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பையை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

பின்னர் பையை திறந்து சோதனை செய்த போது பையில் வங்கி கணக்கு புத்தகம், சில அடையாள அட்டைகள், துணிமணிகள் இருந்தன. பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மீட்கப்பட்ட பை சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கிஷோர் (வயது 18) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. போலீசார் கிஷோரை வரவழைத்து அவரிடம் பையை ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com