சொத்து தகராறில் தம்பியை கொன்றவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் தம்பியை கொலை செய்தவருக்கும், அவரது மகனுக்கும் சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
சொத்து தகராறில் தம்பியை கொன்றவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

சிவகங்கை,

திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது தம்பி ராஜாங்கம் அதே பகுதியில் வசித்து வந் தார். இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜாங்கம் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கல்யாண சுந்தரத்தை வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் திருப்பாச்சேத்தி போலீசார் தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்த்தி கேயன், உறவினரை கொலை செய்த ராஜாங்கம் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் அப ராதம் விதித்தும், ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com