பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் ஆரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 28.1 அடி ஆகும். இதில் 1.853 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 10 மணிக்கு ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மதியம் 12 மணிக்கு மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் ஆரணி ஆற்றில் விடப்படுகிறது. கடந்த 10 நாட்களாக தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 100 கன அடியாக இருந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆரணி ஆற்றின் கரை ஓரமாக உள்ள ஊத்துக்கோட்டை, தாராட்சி, கீழ்சிற்றபாக்கம், மேல்சிட்றபாக்கம், பேரண்டூர், பாலவாக்கம், லட்சியவாக்கம், காக்கவாக்கம், சென்னங்காரணி, ஆத்துபக்கம், அரியபாக்கம், செங்காத்தா குளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், நெல்வாய், மங்களம், பாலவாக்கம், ஆர்.என். கண்டிகை, ஏ.என். குப்பம், மேல்முதலம்பேடு, கீழ் முதலம்பேடு, அறயாந்துறை, கவரப்பேட்டை, பெருவாயில், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, தேவனாஞ்சேரி, லட்சுமிபுரம், லிங்கபையன்பேட்டை, கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், திருவெள்ள வாயால், ஒண்பாக்கம், பிரளயம்பாளையம், பொள்ளாச்சி அம்மன் குளம், ஆரணியாறு வலது புறத்தில் உள்ள போந்தவாக்கம், அந்தேரி, பேரிடிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மாலந்தூர், தொளவேடு, மேல்மாளிகை பட்டு, கீழ்மாளிகை பட்டு, பெரியபாளையம், ராள்ள பாடி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம், வெள்ளோடை, பொன்னேரி, ஆலாடு, கொளத்தூர், குமரசிருளப்பாக்கம், மனோப்புரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிபாளையம், தத்தமஞ்சி, காட்டூர், கடப்பாக்கம், சிறு பழவேற்காடு, ஆண்டார்மடம், தாங்கள்பெரும்புலம் போன்ற கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com