

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த அம்பிபுதூர் பகுதியில் வசிப்பவர் அகமது பாஷா (வயது 55). அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பாரூக் பாஷா (35). பாரூக் பாஷாவும் தந்தையுடன் வியாபாரத்தில் உதவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், அவர்கள் செய்து வந்த அரிசி வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தந்தை, மகன் இருவரும் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டில் இருந்த 2 பேரும் திடீரென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.