அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும்; கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும்; கலெக்டர் உத்தரவு
Published on

கடலூர்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளில் பணிகளை தொடங்கிட வேண்டும். பணிகள் தொடங்காமல் உள்ள ஊராட்சிகளில் உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கூடுதல் பணியாளர்களை கொண்டு பணிகளை தொடங்க வேண்டும்.

கிராமப்பகுதிகளில் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு தொகுப்பிலும் 50 முதல் 100 பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிராமப்பகுதிகளில் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூரை மற்றும் அதன் மேல்நிலைகளில் உள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ள பயனாளிகளை ஊக்குவிக்க வேண்டும்.

தனிநபர் இல்ல கழிவறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைப்பணிகளை செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கவனித்து தரமான முறையில் போட வேண்டும். கோடைக்காலத்தை சமாளிக்க குடிநீர் பணிகை-ளை தங்கு தடையின்றி செய்திட வேண்டும். கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகளில், நீர் நிலைகளில் நீர்த்தேங்கி இருந்தால் நடப்பாண்டில் அதை சரி செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, செயற்பொறியாளர்கள் பிரபாகரன், செல்வக்குமார் மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com