நிதி மேலாண்மை தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் கிரண்பெடி வலியுறுத்தல்

நிதி மேலாண்மை தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
நிதி மேலாண்மை தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் கிரண்பெடி வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

ஊழல் மற்றும் அரசு நிர்வாகத்தில் நிதி மேலாண்மையை உறுதிப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தெளிவான எழுத்துப்பூர்வமான வழிமுறைகள் பெறப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகள் இவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

நிதி விதிகள், கொள்முதல் மற்றும் இடமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை அடையாளம் காண்பது துறை சார்பான விசாரணைகளை உறுதி செய்யவேண்டும். நேரடி பரிமாற்றம், நேர வரம்பு, குறைதீர்க்கும் முறை இவற்றை கண்டிப்பாக பின்பற்றினால் நிதி கசிவினை குறைக்கும்.

சி.பி.ஐ. கிளை

இலவச அரிசிக்கான பணத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் மாற்றுவதன் மூலம் பல சிக்கல்கள் தடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நல்ல நடைமுறைகளை தொடர்வோம். இருக்கும் அமைப்புகளையும் மேலும் வலுப்படுத்துவோம். இது நேர்மையான நிர்வாகத்துக்கு வழிவகுக்கும்.

சி.பி.ஐ. கிளையானது புதுச்சேரிக்கு என்று நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதுவையில் சில முக்கியமான விஷயங்களை கைப்பற்றி உள்ளது.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com