விழித்திரை அறுவை சிகிச்சை சர்வதேச கருத்தரங்கம்

விழித்திரை அறுவை சிகிச்சை குறித்து இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 11-வது சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்திவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழித்திரை அறுவை சிகிச்சை சர்வதேச கருத்தரங்கம்
Published on

இந்த ஆண்டு விழித்திரை அறுவை சிகிச்சையில் புதிய இயல்பு நிலையை எதிர்கொள்வது என்ற கருப்பொருளை தலைப்பாக கொண்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால், ராஜன் ஐ கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன்ராஜன், டாக்டர் அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் கண் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் அதியா அகர்வால், மும்பை ஆதித்யா ஜோத் கண் மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் எஸ்.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு விழித்திரை அறுவை சிகிச்சையில் புதிய இயல்பு நிலையை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து பேசினர்.

கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கண் டாக்டர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று, தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகின்ற விழிப்படிக விழித்திரை பாதிப்பு மீதான சமீபத்திய யுக்திகள் மற்றும் தொழில்நுட்பம் மீதான தற்போதைய தகவல்களை எடுத்து கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com