கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை முடிவு அறிய இணையதள வசதி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றை கண்டறியும் நவீன ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா தடுப்பு முகாம்களில் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படுவது வழக்கம்.

பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், அதன் முடிவுகளை தெரிந்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது.

கொரோனா கிருமி தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தால் அவரை சுகாதாரத்துறையினர் உடனே தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும், கிருமித் தொற்று இல்லை என்றால் அவருக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டு விடுவதும் நடைமுறையில் உள்ளது.

இதனால் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதனை தவிர்க்கும் வகையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் நவீன ஆய்வகத்தில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு சளி மாதிரிகளை கொடுத்த ஒருவர், இந்த இணையதளத்துக்குள் சென்று தனக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு இருப்பதையும், இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் அதுகுறித்த தகவலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com