குருப சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி பேட்டி

கர்நாடகத்தில் குருப சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி கூறியுள்ளார்.
குருப சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி பேட்டி
Published on

பெங்களூரு,

குருப சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்காக தீவிரமாக போராட நாங்கள் தயாராக வருகிறோம். போராட்டத்தின் வடிவம் குறித்து விவாதிக்க வருகிற 11-ந் தேதி எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பீதர், யாதகிரி, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குருப சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடகு குருப இன மக்களின் இந்த கோரிக்கையை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனால் ஒட்டுமொத்தமாக கர்நாடகத்தில் உள்ள குருப சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் பட்டியலில் சேர்ந்துள்ளவர்கள் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள குருப சமூகத்தை அதில் இருந்து விடுவித்து, அதற்கான இட ஒதுக்கீட்டை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதனால் வால்மீகி உள்ளிட்ட பிற சாதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு நிரஞ்சனானந்தபுரி சுவாமி கூறினார்.

மந்திரி ஈசுவரப்பா

அதைத்தொடர்ந்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா கூறுகையில், சவிதா, காடுகொல்லர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் குருப சமூகத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய- மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com