பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
Published on

கரூர்,

பெரிய பொருளாதாரமிக்க நாடாக இந்தியா வர வேண்டும், உயர்கல்வி படிக்கக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும், நாட்டின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது என்பது அப்துல்கலாமின் கனவாக இருந்தது. இதற்காக 2020-ம் ஆண்டை இலக்காக வைத்திருந்தார். அந்தவகையில் 2020-25-ம் ஆண்ட மக்களின் நேர்மறையான எண்ணங்களினால் அந்த இலக்கினை அடையலாம். 2020-ல் நிலவுக்கு செல்வதற்கு ககன்யான் திட்டம் மூலம் செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. மனிதனை பத்திரமாக நிலவுக்கு அழைத்து சன்று மீண்டும் பூமிக்கு திரும்ப கொண்டுவர வேண்டும்.

செயற்கைகோள் அனுப்பப்படும்

இந்த முயற்சிகள் எல்லாம் பரீட்சார்த்த முறையில் நடக்கின்றன. அந்த வகையில் தான் ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. தட்பவெட்பநிலை, கதிரியக்கம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு மூன்று அடுக்குகளாக செயற்கைகோள் அனுப்பப்படும். ஆழ்துளைகிணறுகளில் மீட்பு பணியை மேற்கொள்ள கருவிகள் எல்லாம் இருக்கின்றன.

எனினும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனினும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com