கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தள்ளிவைப்பு

நிர்வாக காரணம் கருதி மேற்காணும் நேர்காணல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது எனவும், நேர்காணல் நடத்துவது மற்றும் பணி நியமனம் வழங்குவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தள்ளிவைப்பு
Published on

அரியலூர்,

கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அரசு தொழில் பயிற்சி நிலையம், அரியலூர் என்ற முகவரியில் இன்று (வெள்ளிக்கிழமை) வருகிற 25-ந் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் என விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அழைப்பு கடிதங்களும் அனுப்பப்பட்டிருந்தது.

தற்போது நிர்வாக காரணம் கருதி மேற்காணும் நேர்காணல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது எனவும், நேர்காணல் நடத்துவது மற்றும் பணி நியமனம் வழங்குவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடத்தப்படும் என விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணத்தை கருத்தில் கொண்டு, மேற்படி நேர்காணல் குறித்த அனைத்து பணிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் நேர்காணல் நடத்துவது மற்றும் பணிநியமனம் வழங்குவது தொடர்பான விவரங்கள் பின்னர் முறையாக அறிவிக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் விஜயலட்சுமி (அரியலூர்), சாந்தா (பெரம்பலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com