மிரட்டும் ‘நிபா’ வைரஸ்: இடுக்கி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கேரளாவை ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் இடுக்கி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மிரட்டும் ‘நிபா’ வைரஸ்: இடுக்கி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
Published on

இடுக்கி,

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு கோழிக்கோடு மாவட் டத்தில் நிபா வைரஸ் தாக்கி யதில் 17 பேர் உயிர் இழந்த னர். அவர்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி என்பவரும் நோய் தாக்கி உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் மிரட்டி வருகிறது. எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத் துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நிபாவைரஸ் பரவி வருவதால், இடுக்கி மாவட்டத்தில் முன்னெச் சரிக்கை நடவடிக்கை தீவிர மாக நடந்து வருகிறது. மேலும் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

இதையடுத்து அவர் தங்கி யிருந்த வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரத்துறை யினர் ஆய்வு நடத்தினர். மேலும் கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர் மஞ்சு தலை மையில் அதிகாரிகளும் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே நிபா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மருத் துவ அதிகாரி பிரியா தலைமை தாங்கி பேசுகையில்,இடுக்கி மாவட்டத்தில் வைரஸ் காய்ச் சல் தொடர்பாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் தகவல் களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இடுக்கி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, மாவட்ட மருத்துவ மனைகளில் நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்படும். நிபா வைரஸ் பறவைகள் மற்றும் கால்நடைகள் மூல மாகவே பரவுகிறது. வவ்வால் கள் கடித்த பழங்களை சாப் பிடும் போது இந்த காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பறவைகள் கடித்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com