மெட்ரோ ரெயில்களில் முதல் வகுப்பு பெட்டி அறிமுகம் அதிகாரி தகவல்

மும்பையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் முதல் வகுப்பு பெட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரி கூறினார்.
மெட்ரோ ரெயில்களில் முதல் வகுப்பு பெட்டி அறிமுகம் அதிகாரி தகவல்
Published on

மும்பை,

மும்பை புறநகரில் காட்கோபர்-வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மும்பையில் மேலும் பல்வறு இடங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

மின்சார ரெயில்களை போன்று மெட்ரோ ரெயிலிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில்களில் முதல் வகுப்பு பெட்டி அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுபற்றி மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும (எம்.எம்.ஆர்.டி.ஏ.) கூடுதல் கமிஷனர் பிரவின் தார்டே கூறியதாவது:-

மும்பையில் மெட்ரோ ரெயில்களில் முதல் வகுப்பு பெட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி மெட்ரொ ரெயிலின் 6 பெட்டிகளில் ஒரு பெட்டி முதல் வகுப்பு பெட்டியாக மாற்றப்படும். முதல் வகுப்பு பெட்டியில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. சாதாரண பயண கட்டணத்தில் இருந்து முதல் வகுப்பு கட்டணம் மாறுபடும்.

இதுதவிர மெட்ரோ ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வை-பை வசதி, செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத் தப்படும்.

டெல்லி, பெங்களூர் மெட்ரோ ரெயில்களில் கூட முதல் வகுப்பு வசதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com