ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் 814 பயிற்சிப் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான ஐ.ஓ.சி.எல். இந்திய எண்ணெய் கழக நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் 814 பயிற்சிப் பணிகள்
Published on

த்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஐ.ஓ.சி.எல்.. இந்திய எண்ணெய் கழக நிறுவனமான இதில் தற்போது பல்வேறு பிரிவுகளில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கான எண்ணெய்க் குழாய்களை பதிக்கும் பைப்லைன் டிவிஷன் பிரிவில் பயிற்சிப் பணிக்கு 310 இடமும், ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் மதுரா சுத்திகரிப்பு ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 150 இடங்களும், ஐ.ஓ.சி.எல். விற்பனை பிரிவில் (மார்க்கெட்டிங் டிவிஷன்) 354 இடங்களும் நிரப்பப்படுகிறது. மொத்தம் 814 பேர் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரங்களை பார்ப்போம்...

குழாய் பதிப்பு பிரிவு...

குழாய் பதிப்பு பிரிவில் தமிழகத்தில் 22 பணியிடங்கள் உள்பட 18 மாநிலங்களில் மொத்தம் 310 இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 16-10-2017-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் ரேடியோ கம்யூனிகேசன் இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிப் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் 6-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான தேர்வு 3-12-2017 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி.எல். மதுரா கிளையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், பிட்டர், பாய்லர் போன்ற பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

31-10-2017 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பி.எஸ்சி. அறிவியல் படிப்புகள், ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்புகள், 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கவும்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானாவ்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 11-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை 18-11-2017-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

விற்பனை பிரிவில் 354 பணிகள்:

மார்க்கெட்டிங் டிவிஷனில் நிரப்பப்படும் 354 பணியிடங்களில் தமிழகம் - பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு 153 இடங்கள் உள்ளன. இது தவிர கர்நாடகா - 69, கேரளா - 46, தெலுங்கானா - 42, ஆந்திரா - 44 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக், இன்ஸ்ட்ருமென்ட், எலக்ட்ரீசியன், லேபரேட்டரி பிரிவில் பயிற்சிப் பணிகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்த, 24 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com