பாம்பன் பால தூண்களில் பொருத்த இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள்

பாம்பன் பால தூண்களில் பொருத்த இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள்
பாம்பன் பால தூண்களில் பொருத்த இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள்
Published on

ராமேசுவரம்

பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலம் 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாகி விட்டதால் அந்தப் பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.432 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் பாம்பன் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலும் கடலுக்குள் முழுமையாக தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. மேலும் புதிய தூக்குப்பாலத்திற்காகவும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. தொடர்ந்து மண்டபம் பகுதியிலிருந்து தூக்குப்பாலம் வரையிலான கடல் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளுக்காக தூண்கள் மீது பொருத்துவதற்காக சத்திரகுடியில் இருந்து கனரக வாகனம் மூலம் மண்டபம் பகுதிக்கு இரும்பு கர்டர்கள் கொண்டு வரப்பட்டு ரயில்வே நிலையம் எதிரில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் புதிய ரெயில் பாலத்தின் மீது பொருத்துவதற்காக புதிய ரெயில்வே இரும்புதண்டவாளங்கள் மண்டபம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய பாலத்தின் தூண்கள் மீது விரைவில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com