

கடத்தூர்,
கொரோனா வைரஸ் எதிரொலியால் கோபியில் கருமாயா வீதி, ராமர் வீதி, சதாசிவராவ் வீதி, கிட்டசாமி வீதி, உப்பு கிடங்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இங்கிருந்து யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே வீதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் நேற்று அந்த பகுதியில் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரது கையிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தினர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று அவர்கள் தெரிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.