இட்டமொழி, மூலைக்கரைப்பட்டி பகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திப்பு

இட்டமொழி, மூலைக்கரைப்பட்டி பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆதரவு திரட்டினார்.
இட்டமொழி, மூலைக்கரைப்பட்டி பகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திப்பு
Published on

இட்டமொழி,

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்கும்படி ஆதரவு திரட்டினார்.

மூலைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள சிந்தாமணி, காடன்குளம், முனைஞ்சிப்பட்டி, தினையூரணி, வடக்கு விஜயநாராயணம், சங்கனாங்குளம், இட்டமொழி பகுதிகளுக்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வேட்பாளருடன் நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசுப்பு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பெருமாள், ஞானமுத்து உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மலையடி, சடையமான்குளம், வடுவூர்பட்டி, கள்ளிகுளம், துவரைகுளம், மீனவன்குளம், கீழக்கருவேலங்குளம், காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

அமைச்சருடன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், பாபு உள்பட பலர் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com