இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் ஜமாபந்தி மனுக்களை அடுத்த மாதம் 31-ந் தேதி வரை பதிவேற்றலாம்

இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் ஜமாபந்தி மனுக்களை அடுத்த மாதம் 31-ந் தேதி வரை பதிவேற்றலாம் மாவட்ட கலெக்டர் தகவல்.
இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் ஜமாபந்தி மனுக்களை அடுத்த மாதம் 31-ந் தேதி வரை பதிவேற்றலாம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதுடன் தமிழ்நாட்டில் வருகிற 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களின் பல்வேறு பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனுக்களை (ஜமாபந்தி) https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய வழி மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவும் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு உரிய தகவல் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com