தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் சிவராசு தலைமையில் தொடங்கியது

தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.
தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் சிவராசு தலைமையில் தொடங்கியது
Published on

தொட்டியம்,

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் ஜமாபந்தி தொடங்கியது. இதில் தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

நேற்று முன்தினம் ஏழூர்பட்டி பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், நேற்று காட்டுப்புத்தூர் பிர்காவை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். நேற்று முன்தினம் 501 மனுக்களும், நேற்று 152 மனுக்களும் பெறப்பட்டன.

உரிய நடவடிக்கை

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிசங்கர்பிரசாத், மண்டல துணை தாசில்தார் தங்கவேல், தொட்டியம் தாலுகாவை சேர்ந்த அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் நேற்று முன்தினம் 94 கரியமாணிக்கம் பிர்காவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், நேற்று மண்ணச்சநல்லூர் பிர்காவுக்கு உட்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். நேற்று முன்தினம் 389 மனுக்களும், நேற்று 425 மனுக்களும் பெறப்பட்டன.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு சப்-கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். நேற்று முன்தினம் அந்தநல்லூர் பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், நேற்று குழுமணி பிர்காவை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

லால்குடி

இதுபோல் லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் புள்ளம்பாடி பிர்காவிற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

திருவெறும்பூர்

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்டி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் நேற்று முன்தினம் நவல்பட்டு பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், நேற்று வேங்கூர் பிர்காவை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

துறையூர்

துறையூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நேற்று முன்தினம், கொப்பம்பட்டி பிர்காவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில் மொத்தம் 158 மனுக்கள் பறப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com