ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Published on

சேந்தமங்கலம்,

நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் நேற்று நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம் முன்னிலை வகித்தார். இதையொட்டி நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் பாஷா, பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் நகர நிர்வாகிகள், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக எம்.ஜி.ஆர். சிலைக்கும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். இதேபோல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சேந்தமங்கலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று சேந்தமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மீனவரணி செயலாளர் பாஸ்கர், இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், கென்னடி, பூபதி, ஆறுமுகம், முருகேசன், ஸ்டாராசெந்தில், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பேரூராட்சி 18 வார்டுகளிலும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மோகனூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் கருமண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கமுத்து வரவேற்றார். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் உமாராணி உமாபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன், முன்னாள் பேருராட்சி துணைத்தலைவர் புரட்சி பாலு, துணைச்செயலாளர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தியாகராஜன், பேருர் கழக விவசாய அணி பொருளாளர் மணி மற்றும் நிர்வாகிகள் செல்வம், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் தாவீது நன்றி கூறினார். அதேபோல் எஸ்.வாழவந்தி. கே.புதுப்பாளையம், செங்கப்பள்ளி, என்.புதுப்பட்டி, அருர், ஆண்டாபுரம், வளையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகி பத்மநாபன் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, கட்சி கொடி ஏற்றி வைத்தார். இதில் நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், பிரகாஷ், மணிகண்டன், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

எருமப்பட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் அலங்கானத்தம் பிரிவு, போடிநாயக்கன்பட்டி, பெருமாப்பட்டி, காளிசெட்டிப்பட்டி புதூர் ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com