ஜெயலலிதா நினைவு நாள்: பரமக்குடி,போகலூர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் மலர் அஞ்சலி

பரமக்குடி மற்றும் போகலூர் பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
ஜெயலலிதா நினைவு நாள்: பரமக்குடி,போகலூர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் மலர் அஞ்சலி
Published on

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அனைத்து பகுதிகளிலும் ஜெயலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி பஸ் நிலையம் அருகில் ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பரமக்குடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் திசைநாதன், நிலவள வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய சங்க துணைச் செயலாளர் சிங்காரபூபதி, வக்கீல் பிரிவு வக்கீல் நாகராஜன், இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ், பரமக்குடி இளைஞர் பாசறை நகர்

செயலாளர் செந்தில்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கார்த்திக், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், நகர் மாணவர் அணி பொருளாளர் யோகமணிகண்டன், வார்டு செயலாளர்கள் அழகர், மாரி மற்றும் ஓவியர் சரவணன், சிவா தேவன், கள்ளிக்கோட்டை கிளைச்செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா ஏற்பாட்டில் சந்தக்கடை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் கண்ணன், அண்ணா தொழிற்சங்கம் செல்வராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சந்திரசேகர், நகர் செயலாளர் கணேசன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத் ஏற்பாட்டில் பார்த்திபனூரில்ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சரவணன், வடிவேலு, அண்ணா தொழிற்சங்கம் முருகன், மேலப்பெருங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் சூடியூர் தேவராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் ராம்குமார், பார்த்திபனூர் நகர் அவைத் தலைவர் மாணிக்கம், நகர் பொருளாளர் கார்த்திக் உள்பட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். போகலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய கழக செயலாளர் நாகநாதன் ஏற்பாட்டில் அனைத்து கிராமங்களிலும் ஜெயலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பரமக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒன்றிய செயலாளர் முத்தையா ஏற்பாட்டில் வேந்தோணி, மேலாய்குடி, பார்த்திபனூர் உள்பட பல்வேறு ஊர்களில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.எட்டிவயல் கிராமத்தில் ஊராட்சி தலைவர் கனசக்திபாஸ்கரன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com