

தமிழக முதல்-அமைச்சா மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்த தகுதியுள்ள 13 லட்சம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர், நாபளூர், பெரியகளக்காட்டூர், காவேரிராஜபுரம், வீரராகவபுரம் என மொத்தம் 6 தொடக்க வேளாண் கூட்டுறவு மையத்தில் விவசாயத்துக்காக 5 பவுன் வரை வைத்து நகைக்கடன் பெற்ற 500 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கான ரசீதை நேற்று பயனாளர்களிடம் கொடுத்து கடன் தள்ளுபடியை திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் துவங்கி வைத்தார். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.