சுங்குவார்சத்திரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளை

சுங்குவார்சத்திரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சுங்குவார்சத்திரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளை
Published on

வீட்டில் கொள்ளை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவர் மூளையில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சுந்தர்ராஜனை கவனிப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

விசாரணை

அதேபோல் சுந்தர்ராஜன் வீட்டின் பின்புறம் குளக்கரை தெருவில் அமைந்துள்ள ராமன் என்பவர் வீட்டில் வெள்ளி கொலுசு மற்றும் மணி என்பவர் வீட்டில் 4 ஆடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com