ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
Published on

ஜெயங்கொண்டம்,

ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை கிராம ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், போலீசாரின் முதல் அறிக்கையில் அவரது பெயரை நீக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

இதேபோல் தா.பழூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் ஸ்ரீதேவியிடம் தற்செயல் விடுப்பு விண்ணப்பங்களை அளித்தனர்.

பின்னர் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற வேண்டும், ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர் அல்லது உறவினர்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஊராட்சி செயலாளர்கள் நேற்று பணிக்கு வராததால் தா.பழூர் ஒன்றியம் முழுவதும் வளர்ச்சிப் பணிகள் பெருமளவில் தடைபட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com