தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் துணை இயக்குனர் பழனி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துணை இயக்குனர் பழனி தெரிவித்து உள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் துணை இயக்குனர் பழனி தகவல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனரும், முதல்வருமான எஸ்.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி வரை அனுப்பலாம். 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் விவரங்கள், தொழில் பிரிவுகள், இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் ஆகியவை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு நிலை முன்னுரிமை சான்றிதழ்கள் இருந்தால், அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் ஒதுக்கீட்டின்படி தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறும்.

எனவே மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, தங்களது சரியான செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பப்படும்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குனரை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com