

மும்பை,
ஆற்றில் குதித்து வாலிபர் ஒருவர் தற்கொல செய்துகொண்டார். 9-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதை பார்த்து பதறினார்கள். உடனடியாக ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காகாசாகேப் ஷிண்டே (வயது 28) என்பவர் ஆற்றுக்குள் குதித்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் உடனடியாக மீட்கப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டத்தின் போது, வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அவுரங்காபாத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர்.