

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர் அஜய்பாபு (வயது 38). என்ஜினீயரான இவர், பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர், பங்குச்சந்தை முதலீடு செய்ததில் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அஜய்பாபு, கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார்.
பின்னர் திடீரென கானத்தூர் ரெட்டிக்குப்பம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் அஜய்பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.