எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி சித்தராமையா பேட்டி

முதல்-மந்திரி எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி சித்தராமையா பேட்டி
Published on

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஜமகண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பாவை முதல்- மந்திரியாக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை. ஆனால் அவர் கெஞ்சி கேட்டு, முதல்-மந்திரி பதவியை பெற்றுள்ளார். துணை முதல்-மந்திரி பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. அந்த பதவிக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது.

கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 பேருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியுள்ளது. இதை எடியூரப்பா விரும்பவில்லை. எடியூரப்பாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3 பேர் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக் ஆகியோரை பா.ஜனதா ஓரங்கட்டியுள்ளது.

அதனால் பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்க வாய்ப்புள்ளது. எடியூரப்பா எத்தனை நாட்கள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டோம். இந்த பா.ஜனதா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com