கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் கமல்ஹாசன் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை கமல்ஹாசன் வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் கமல்ஹாசன் வழங்கினார்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் கஜா புயலில் சிக்கி 150-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் லட்சக்கணக்கான வலைகள் காற்றின் வேகத்தால் தூக்கிவீசப்பட்டு முழுமையாக சேதம் அடைந்தன. இந்தநிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திற்கு நேற்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வந்தார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 159 மீனவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் நிவாரண பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நான் கேள்வி பட்டேன். இந்த செயல் மனதிற்கு வேதனை அளிப்பதாக உள்ளது. நாங்கள் பட்ட கடனை தீர்க்கவே நிவாரண பொருட்கள் கொடுக்க வந்துள்ளோம். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மரங்கள் அகற்றப்படாமல் சாய்ந்து கிடக்கின்றன. கூரை வீடுகளின் கட்டிடங்கள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கின்றன. இன்னும் பல கட்டிடங்கள் சரி செய்யப்படவில்லை. இதையெல்லாம் சரி செய்வதற்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் தேர்தலுக்காக வந்தவர்கள் இல்லை, ஆறுதலுக்காக வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com