

வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வேங்கடமங்கலம் ஊர் பொதுமக்கள் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து மேளதாளம் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக கல்விசீர் வரிசை பொருட்களுடன் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துசென்றனர்.