

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காவலன் கேட் அருகே காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் திரளான தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி, கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ. சேகரன், நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி நிர்வாகி களாம்பாக்கம் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கொத்தியம்பாக்கம் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன், ஜெயக்குமார், ரமேஷ், கூளூர் ராஜேந்திரன், கிறிஸ்டி, மோதிலால், சங்கீதா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன் நன்றி கூறினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிகள் ஒருங்கிணைந்து மாவட்ட பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தமிழன் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், சுகுமார், செல்வசேகரன், துணை செயலாளர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.