கனிமொழி எம்.பி. இன்று தூத்துக்குடி வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. இன்று தூத்துக்குடி வருகிறார்.
கனிமொழி எம்.பி. இன்று தூத்துக்குடி வருகை
Published on

தூத்துக்குடி,

தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (புதன்கிழமை) தூத்துக்குடிக்கு வர உள்ளார்.

கனிமொழி எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அரசு முறைப்படி வேலைகளுக்கு நிர்வாக அனுமதி பெற்று, டெண்டராகி உள்ள பணிகள் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட குமாரப்பண்ணையூரில் ரூ.25 லட்சம் செலவில் சமுதாயகூடம், மாலை 5 மணிக்கு அமலிநகரில் ரூ.25 லட்சம் செலவில் சமுதாயகூடம், மாலை 5.30 மணிக்கு ஆலந்தலையில் ரூ.25 லட்சம் செலவில் மீன் வலைக்கூடம், ரூ.10 லட்சம் செலவில் ரேஷன்கடை, அதனை தொடர்ந்து உடன்குடி ஒன்றியம் மணப்பாட்டில் ரூ.9 லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்கு ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.

அதன் பின்னர் இரவு 7 மணிக்கு தண்டுபட்டு கிராமத்தில் நடைபெற உள்ள திருச்செந்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

21-ந் தேதி காலை 10 மணிக்கு காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து 11 மணிக்கு காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மாலை 6 மணிக்கு சிவகளை கிராமத்தில் நடக்க உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com