பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கெரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் பாலதண்டாயுதபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com