காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா எளிய முறையில் 21-ந்தேதி தொடங்குகிறது

காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனி திருவிழா நடப்பது வழக்கம்.
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா எளிய முறையில் 21-ந்தேதி தொடங்குகிறது
Published on

காரைக்கால்,

இறைவனின் (பரமசிவன்) திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனி திருவிழா நடப்பது வழக்கம். இந்த மாங்கனி திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்தநிலையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த ஆண்டு மாங்கனி திருவிழாவை கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 21-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், 24-ந் தேதி பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடும், மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி அம்மையாருக்கு, இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மாறாக கோவில் உபயதாரர்கள், அறங்காவல் குழுவினர், முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com