மானாமதுரை மாணவர்கள் சாதனை

அகில இந்திய கராத்தே போட்டியில் மானாமதுரை மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
மானாமதுரை மாணவர்கள் சாதனை
Published on

மானாமதுரை,

அகில இந்திய கராத்தே போட்டி நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மானாமதுரை ஆலன் ராஜ் சிடோயோ கராத்தே பள்ளி மாணவர்கள் 37 பேர் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

இதில் 6 வயதுக்குட்பட்ட பிரிவில் உதயார்ஜூன் கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கமும் 8 வயதுக்குட்பட்ட பிரிவில் சூரியார்ஜூன் கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஹம்சவஹினி கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும், சண்டை பிரிவில் வெண்கலப் பதக்கமும், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் ஹன்சிகா கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 10வயதுக்குட்பட்ட பிரிவில் கபிநயா கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும் சண்டை பிரிவில் தங்கப்பதக்கமும், ரதீபா கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும் சண்டை பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் அருள்பாண்டியன் கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும், சண்டை பிரிவில் தங்கப்பதக்கமும், 11 வயதுக்குட்பட்ட பிரிவில் கபினேஸ்கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும், சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ராஜலெட்சுமி கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் சண்டை பிரிவில் வெண்கலப் பதக்கமும், கமலேஷ் கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும் சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் சி. ஹசில்குமார் கட்டா பிரிவில் தங்கப்பதக்கமும் சண்டை பிரிவில் தங்கப்பதக்கமும், சமயவேல் கட்டா பிரிவில் வெண்கலப் பதக்கமும் சண்டை பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்றனர் உள்ளிட்ட. மொத்தம் 16 தங்கம், 14 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கமும் பெற்ற இவர்களையும் பயிற்சியளித்த சிவநாகாஜூன், பெருமாள், உமா ஆகியோரையும் ரயில்வே துறை அதிகாரி மூத்த பகுதி என்ஜினீயர்கள் கடற்கரைதங்கம், பாலமுருகன் ஜே.இ. சிக்னல் ஜோதீஸ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com