கார்த்திகை தீபத்திருவிழா: நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது. இதை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழா: நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது
Published on

நாமக்கல்,

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். மேலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

எனவே நாமக்கல் நகரில் நேற்று கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் அகல் விளக்குகளை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்து இருந்தனர்.

அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்தது

தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட இந்த விளக்குகள் தாமரை பூ, குத்துவிளக்கு, விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. இவை அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.2, ரூ.5, ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டன. இதை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்தது.

இதற்கிடையே வழக்கம்போல் இந்த ஆண்டும் நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு 7 மணி அளவில் 1,008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com