கரூரில் நகரத்தார் நோன்பு விழா: ஒரு கிலோ உப்பு ரூ.33 ஆயிரத்திற்கு ஏலம்

கரூரில் நேற்று நடந்த நகரத்தார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ.33 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
கரூரில் நகரத்தார் நோன்பு விழா: ஒரு கிலோ உப்பு ரூ.33 ஆயிரத்திற்கு ஏலம்
Published on

கரூர்,

கரூரில் நேற்று நகரத்தார் சங்கம் சார்பில் நோன்பு விழா நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் குமரப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் மேலை பழனியப்பன் நோன்பு விழா குறித்து விளக்கி கூறி வரவேற்று பேசினார். விழாவில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பின்னர் சிறப்பு கூட்டு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. சமூக பெரியவர்கள் வைரவன், அருணாசலம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டு இலை எடுத்து நோன்பு கலைந்தனர்.

ஒரு கிலோ உப்பு ரூ.33 ஆயிரம்

இதனை தொடர்ந்து வழிபாட்டில் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 21 மங்கல பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ உப்பு ரூ.33 ஆயிரத்துக்கும், ஒரு கிலோ கற்கண்டு ரூ.6006- க்கும், மணமாலை ரூ.16 ஆயிரத்திற்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற்றது. பின்னர் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.இதனை தொடர்ந்து பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் குளித்தலை, புலியூர், வெங்கமேடு, தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிவாழ் சமூக மக்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com