கரூர் அரசு மருத்துவக்கல்லூரி- குடியிருப்பு கட்டுமான பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூரில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் குடியிருப்பு கட்டிட கட்டுமானப்பணிகளை தலைமை பொறியாளர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி- குடியிருப்பு கட்டுமான பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் காந்திகிராமம் அருகில் சணப்பிரட்டியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை குடியிருப்பு கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை (கட்டிடம்) திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கே.பிரபாகர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்ட மக்களின் நலன் காப்பதற்காக ரூ.229 கோடியே 46 லட்சம் மதிப்பில் 11 லட்சத்து 77 ஆயிரத்து 933 சதுர அடி பரப்பளவில் நடைபெற்று வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் மற்றும் விடுதி, குடியிருப்புகள் கட்டிட கட்டுமானப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணிகள் முடிவது எப்போது?

இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டில் கொண்டுவர அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவக்கல்லூரி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது திருச்சி மருத்துவப்பணிகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் குணசேகரன், கோட்ட செயற்பொறியாளர் மாதையன், உதவி செயற்பொறியாளர் மகாவிஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com