கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் மே மாத இறுதிக்குள் முடியும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தகவல்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் மே மாத இறுதிக்குள் முடியும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தகவல்
Published on

கரூர்,


கரூர் காந்திகிராமத்தில் ரூ.269 கோடி மதிப்பீட்டில் 800 படுக்கை வசதிகளுடன், 150 மாணவ-மாணவிகள் பயிலக்கூடிய வகையில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப்பொறியாளர் (கட்டிடம்) எஸ்.மனோகர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கட்டிட பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி அன்று பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிவுற்றால், மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் அமையும்.

இக்கட்டுமான பணிகள் வரும் மே மாதம் இறுதிக்குள் விரைந்து முடிக்கப்பட்டு 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் கே.பிரபாகரன், கண்காணிப்பு பொறியாளர் மாதையன், கோட்ட செயற்பொறியாளர் இளஞ்செழியன், உதவி செயற் பொறியாளர்கள் சிவக்குமார், மகாவிஷ்ணு, தவமணி மற்றும் உதவிப்பொறியாளர்கள் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com