வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை கரூர் எம்.பி. ஜோதிமணி பேட்டி

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி. இந்த பகுதியில் நேற்று கரூர் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.
வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை கரூர் எம்.பி. ஜோதிமணி பேட்டி
Published on

வேடசந்தூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி. இந்த பகுதியில் நேற்று கரூர் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். அதன்படி வேடசந்தூர் தொகுதியில் உள்ள நாகம்பட்டி, லவுகணம்பட்டி, குன்னம்பட்டி, சேணன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கருக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும், வேடசந்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளிகளிலும் வாக்காளர்களுக்கு நன்றி கூறியதுடன், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேடசந்தூர் தொகுதியில் கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள் ளது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இருந்தாலும், குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் முறையாக தண்ணீர் திறந்து விடாததால் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. மக்களின் குறைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. அதை தட்டி கழிப்பவர்களுக்கு தொடர்ந்து அரசியலில் நீடிப்பதற்கோ, திருப்பி வாக்கு கேட்டு வரவோ எந்த உரிமையும் இல்லை. வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நீர்நிலைகள் தூர்வாரப்படும். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், காங்கிரஸ் வட்டார தலைவர் காசிபாளையம் சாமிநாதன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com