கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 43 பேரின் மனுக்கள் ஏற்பு 11 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 43 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 11 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 43 பேரின் மனுக்கள் ஏற்பு 11 பேரின் மனுக்கள் நிராகரிப்பு
Published on

கரூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டர் அன்பழகன் பெற்றார்.அதனடிப்படையில் அ.தி.மு.க. வேட்பாளர் மு.தம்பிதுரை, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் டி.எஸ்.என்.தங்கவேல் உள்பட மொத்தம் 54 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பரிசீலனையை தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நடத்தினார்.

இதில் ஒவ்வொரு வேட்பாளர் வாரியாக வாசிக்கப்பட்டு அவர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்றும், அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் என்னென்ன என்றும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.

இதில் அகில இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த சுப்ரமணியன், சுயேச்சை வேட்பாளர் தம்பிதுரை உள்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 43 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில், தேர்தல் நடத்தும் துணை அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றதொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மல்லிகா, வேட்புமனுக்களுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகள் அருள், ராம்குமார் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com