கருவேப்பிலைபாளையம் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் அமைச்சர்களிடம் கிராமமக்கள் கோரிக்கை

Published on

உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து ஒரே காரில் புறப்பட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டாத்தூர் கிராமத்தில் வந்தபோது கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள் திடீரென காரை வழிமறித்து அமைச்சர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கருவேப்பிலை பாளையம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால் அரசின் சேவைகளை பெற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே எங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பொன்முடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.. அமைச்சரின் காரை கிராமமக்கள் வழிமறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com