காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
Published on

அம்பை,

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வக்கீல்கள் சங்கம் சார்பில் அம்பை குற்றவியல் நடுவர் கோர்ட்டு வாசலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரதாபன், ஆதிமூலகிருஷ்ணன், சாகுல்அமீது மீரான், குமாரவேல் பாண்டியன், ராமராஜ் பாண்டியன், வள்ளுவராஜ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ராணுவ வீரர்களுக்கு மாஞ்சோலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேயிலை தோட்ட துணை மேலாளர் வாஷ் நாயக், தலைமை மருத்துவ அதிகாரி ஆசிஷ்குமார், நிர்வாக மேலாளர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் நகரசபை அலுவலகம் சார்பில் ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் நகரசபை ஆணையாளர் பவுன்ராஜ், மேலாளர் வைரவநாதன், யூசுப், சேக் அப்துல்காதர், கணேசன், மைதீன், ராஜேந்திர பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com